தாடிய எடுத்ததுக்கு அப்புறம்தான் முகமே பிரைட்டா தெரியுது..! செம்ம மாசான லுக்கில் குக் செய்யும் நடிகர் சிம்பு..!

simbu-1
simbu-1

actor simbu latest look video viral in social media: தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகனாக வலம் வருபவர் தான் லிட்டில் சூப்பர் ஸ்டார். இவரைப் பற்றி திரை உலகில் ஏகப்பட்ட சர்ச்சைகளும் விமர்சனங்களும் வந்துகொண்டே இருந்தன அந்தவகையில் என்னதான் பல்வேறு பிரச்சனையை சந்தித்தாலும் இவருக்கென  திரை உலகில் மாபெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் சமீபகாலமாக நடிகர் சிம்பு நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் படு தோல்வியை தான் கொடுத்து வருகிறது இந்நிலையிலும் அவர் நடித்த செக்க சிவந்த வானம், வந்தாராஜாவாதான்வருவேன் போன்ற திரைப்படங்கள் அவரை சினிமாவில் ரீ என்ட்ரி  கொடுப்பதற்கு ஒரு நல்ல வழிகாட்டியாக அமைந்தது.

ஆனால் நடிகர் சிம்புவின் உடல் எடை அளவுக்கு மீறி அதிகமானதன் காரணமாக  எந்த கதாபாத்திரமும் அவருக்கு சிறப்பாக பொருந்தவில்லை இந்நிலையில் தன்னுடைய உடல் எடையை எப்படியாவது குறைத்து விடவேண்டும் என்ற காரணத்தினால் கடுமையாக போராடி தன்னுடைய உடல் எடை 70 கிலோ வரை குறைத்து விட்டார்.

மேலும் நடிகர் சிம்பு குண்டாக இருக்கும் பொழுது ஒரு நாளைக்கு ஐந்து பிரியாணி சாப்பிட்டதாக அவருடைய பயிற்சியாளர் கூறியிருந்தார்கள் ஆனால் தற்போது தன்னுடைய உடல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்ற காரணத்தினால் குடிபழக்கத்தை கூட நிறுத்தி விட்டாராம் இந்நிலையில் பிரேம்ஜி போன்ற நண்பர்கள் இருந்தும் இவர் இப்படி மாறியது கொஞ்சம் ஆச்சரியம்தான்.

இந்நிலையில் நடிகர் சிம்பு வீட்டில் சமையல் செய்யும் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் அதில் பேசிய சிம்பு லாக்டவுன் காரணத்தினால் தான் நான் தாடியை எடுத்து விட்டேன் இப்போதுதான் எனது முகம் நன்றாக தெரிகிறது என்று கூறியுள்ளார். இந்நிலையில் தாடி இல்லாமல் சிறுவயது சிம்புவை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளார்கள்.