பல கோடி பட்ஜெட் படத்தில் இணைந்த நடிகர் சிம்பு.! அதிரடி முடிவால் நெகிழ்ந்து போன திரைப்பிரபலங்கள்..

simbu
simbu

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமான சிம்பு சில வருடங்களுக்கு முன்பு சரியாக படபிடிப்பிற்கு வர மாட்டார் எனவும் அப்படி வந்தாலும் முழுசாக நடித்து தர மாட்டார் எனவும் எனவே இதன் காரணமாக இயக்குனர்கள் சிம்புவை வைத்து படம் தயாரிப்பதற்கு தயக்கம் காட்டுகிறார்கள் எனவும் ஏராளமான விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது அதையெல்லாம் மாற்றிக்கொண்டு படங்களில் தொடர்ந்து நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சில காலங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்ததால் சிம்பு மிகவும் குண்டாக இருந்த அந்த நிலையில் தற்போது தான் தன்னுடைய படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தில் இவருடைய கெட்டப்பை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

ஏனென்றால் அந்த அளவிற்கு மிகவும் ஸ்லிம்மாக பள்ளி பருவ பையன் போல் மாறி இருந்தார் இந்நிலையில் தற்பொழுது இவர் பத்து தல திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அதில் கேங்ஸ்டர் கதாபாத்திரம் இருப்பதால் சற்று உடல் எடையை ஏற்றி மாசான லுக்கில் இருந்து வருகிறார். பத்து தல திரைப்படம் வருகின்ற 30ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

எனவே பட குழுவினர்கள் இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரம் காமித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தினை அடுத்து சிம்பு கமலின் ராஜ்கமல் ஃபிலிம் தயாரிக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்க  இருக்கும் நிலையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே இதற்காக சிம்பு அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம் அதாவது தன் சம்பளத்தை கணிசமாக குறைத்துள்ளார் ஏனென்றால் சமீப காலங்களாக பல நடிகர்கள் பான் இந்திய படமாக பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிப்பதற்காக ஆர்வம் காமித்து வருகிறார்கள் அதேபோல் சிம்புவும் சினிமாவில் மேலும் வளர வேண்டும் என்பதற்காக பல கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருப்பதனால் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ள முடிவெடுத்து இருக்கிறாராம். இவ்வாறு பணம் முக்கியம் இல்லை சினிமாவில் மேலும் வளர வேண்டும், தன்னுடைய ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே இதற்கு மேல் சிம்பு நடிக்க இருக்கிறார்.