actor simbu iswaran movie teaser release video: நடிகர் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் அதற்கிடையில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.
ஒப்பந்தமாகி ஒரே மாதத்திலேயே இந்த திரைப்படத்தை எடுத்து முடிக்க முடியும் என்பது சாத்தியமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார். ஆனால் அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த திரைப்படத்தை ஒரே மாதத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் டப்பிங் வேலையையும் முடித்து கொடுத்தார் நடிகர் சிம்பு. மேலும் இந்த திரைப் படத்தில் இவருடன் ஜெயம் ரவியுடன் பூமி திரைப்படத்தில் நடிக்கும் நடிகை நிதி அகர்வால் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அந்த திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு மாதத்திலேயே இவ்வளவும் நடந்துள்ளதா என ஆச்சரியத்தில் உள்ளனர். இதோ அந்த டீசர் வீடியோ.