இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் சிம்புவின் மார்க்கெட் பெரிய அளவில் எகிரியது. அதற்கு முக்கிய காரணம் சிம்பு இந்த படத்தில் செம ஸ்மார்ட் ஆக நடித்திருந்தார்.
மேலும் மாநாடு படம் வெளியாகி அப்பொழுது 100 கோடிக்கும் மேல் வசுலை அள்ளி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவை கமிட் செய்ய பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முன்வந்த நிலையில் சிம்பு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்து வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதற்கு முன் கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகி வெளிவந்த படங்கள் செம ஹிட் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது. அதனால் வெந்து தணிந்தது காடு படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் ஆவலாக இருக்கின்றன. இந்த படம் அடுத்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்து தல படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது சிம்பு ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷமாக பத்து தல படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட இரண்டு மாஸ் ஸ்டில்களை சிம்பு வெளியிட்டு பத்து தல படத்தில் கலந்து கொண்டதாக அறிவித்துள்ளார். மேலும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் முழுவதும் முடிவடைந்து அடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கும் என கூறப்படுகிறது.
Shooting in progress…. 🎥#PathuThala pic.twitter.com/8ghqApLijf
— Silambarasan TR (@SilambarasanTR_) August 1, 2022