தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு இவர் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பட வாய்ப்பில் மிக பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நமது நடிகர் சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படம் படப்பிடிப்பில் இருப்பதன் காரணமாக சிம்பு பிஸியாக இருந்து வருகிறாராம் மேலும் இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு ஹன்சிகா உடன் மகா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் ஹன்சிகாவின் 50வது திரைப்படம் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இந்த திரைப்பட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை பெரியசாமி இயக்குவது மட்டுமில்லாமல் இத்திரைப்படம் குடும்ப திரைப்படம் ஆகும் மேலும் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரையுமே நமது இயக்குனர் அணுகி உள்ளாராம்.
அந்தவகையில் இருவருமே இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறது என்று கூறியது மட்டுமில்லாமல் இவர்கள் இருவருமே வாலு என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள் அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின்னர் சில காரணத்தால் பிரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் ஒன்றாக நடிப்பதை பார்த்தால் மறுபடியும் இவர்கள் காதல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.