நடிகர் சிம்பு இத்தனை மாஸான படங்களை தவிர்த்து உள்ளார்.! காரணம் தான் ரொம்ப சப்பையா இருக்கு.

simbu
simbu

Actor Simbu is avoiding dirty pictures : சினிமாவுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பாடலாசிரியராகவும் பாடகராகவும் தமிழ் சினிமா உலகில் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கி வருகிறார்.

இப்படி சினிமாவுலகில் கலக்கிக் கொண்டு வந்து கொண்டிருக்கும் சிம்பு மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன இவர் பெரும்பாலும் ஷூட்டிங் இருக்கும் நேரத்திற்கு சரியாக வரமாட்டார், சொன்னபடி படத்தை முடித்துக் கொடுக்க மாட்டார் என்ற அடுக்கடுக்காக இவர் மீது குற்றச்சாட்டுகள் அதிகமாகி வருகின்றன.

இருப்பினும் ஒரு சில பிரபலங்கள் அது எல்லாம் கிடையாது இவர் சூட்டிங் நேரத்துக்கு சரியா வந்து விடுவார் என கூறுக்கின்றனர். இது ஒருபக்கம் இருந்தாலும் தமிழ் சினிமா உலகில் இவர் பல படங்களில் நடிக்க இருந்து பின் டிராப் ஆகி உள்ள படங்ககள் பல  அந்த வகையில் இவர் நடிக்க இருந்து பின் ட்ராப் ஆன படங்கள் என்னவென்று தற்போது பார்ப்போம்.

1. ஏசி

எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான நியூ படத்திற்கு பிறகு  சிம்பு அவர்களை வைத்து ஏசி என்ற திரைப்படத்தில் இயக்க இருந்தார் இந்த படத்தின் பாட்டில் சிம்புவும் அசினும் இணைந்து நடிக்க இருந்தனர் ஆனால் எதிர்பாராத விதமாக இப்படம் கைவிடப்பட்டது.

2. கெட்டவன்

சிம்பு மன்மதன் படத்தை தொடர்ந்து வித்தியாசமான ஒரு கெட்டப்பில் நடித்த திரைப்படம் கெட்டவன் இத்திரைப்படத்தை நந்து அவர்கள் இயக்க இருந்தார் ஆனால் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதன்பின் படம் டிராப் ஆனது.

3. தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வலம் வந்தவர் லிங்குசாமி இவர் நடிகர் ஆர்யாவை வைத்து வேட்டை என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் ஆனால் இப்படத்தில் முதலில் சிம்பு அவர்கள் தான் நடிக்க இருந்தார் ஆனால் இவர் காலதாமதம் ஆனதால் அவருக்கு பதிலாக ஆர்யாவை வைத்து இப்படத்தை படத்தை எடுத்து முடித்தார்.

4. கான்

தமிழ் சினிமா உலகில் சிறப்பான மற்றும் வித்தியாசமான கதைகளை எடுக்க கூடியவர் என்றால் அது செல்வராகவன் தான் இவரது இயக்கத்தில் சிம்பு அவர்களுக்கு இருந்த திரைப்படம் கான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியானது. ஆனால் கடைசியில் படம் டிராப் ஆனது.

5.வாலிபன்

சிம்பு அவர்கள் 2010 ஆண்டு வாலிபன் என்ற திரைப்படத்தில் நடிக்க இருந்தார் மேலும் இப்படத்தை அவரே இயக்கி இருந்தார் ஆனால் இத்திரைப்படம் எதிர்பாராதவிதமாக கைவிட்டது இத்திரைப்படத்தின் மேலும் இவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைப்பதாக வந்ததாக சொல்லப்படுகிறது.

6. சிம்பு அவர்கள் கோ படத்தில் முதலில் நடிகை இருந்தார்.  அப்பொழுது ஹீரோயினை மாற்றுங்கள் என்று சிம்பு இயக்குனரிடம் கூற இயக்குனர் ஹீரோவை ஏமாற்றிவிட்டார்.

7. தனுஷ் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் வடசென்னை இத்திரைப்படத்தை வெற்றிமாறன் அவர்கள் இயக்கியிருந்தார் ஆனால் இத்திரைப்படம் முழுக்க முழுக்க சிம்புவுக்காக உருவாக்கப்பட்டது அதை சிம்புவே தவிர விட்டுள்ளார் என்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.