நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் அவர் மீது உள்ள குற்றச்சாட்டு அதிகரித்து தான் வருகிறது, சமீபத்தில் கூட நடிகர் சிம்பு மீது இயக்குனர் ஒருவர் குற்றச்சாட்டை வைத்தார். அதாவது அவர் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வர மாட்டார் என்றுக் கூறினார். இந்த நிலையில் சிம்பு இவையெல்லாம் உடைத்தெறிய வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்துக்கு செல்வது படத்தை முடித்துக் கொடுப்பது என கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்தார்.
ஆனால் தற்பொழுது சிம்பு பற்றி வந்த ஒரு தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதாவது சிம்பு தற்பொழுது மாநாடு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் வரை தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் மாநாடு திரைப்படத்தில் அதிக நபர்கள் கலந்து கொள்ள இருப்பதால் தற்காலிகமாக இந்த திரைப்படத்தை தள்ளி வைத்துள்ளார்.
இந்த நிலையில் சிம்பு இதற்கிடையில் எப்படியாவது சுசீந்தரன் திரைப்படத்தை முடித்துவிடலாம் என முடிவேடுத்தார். அதனால் கோவிலுக்கு சென்று சாமி தரிசனத்துடன் துவங்கியுள்ளார் சிம்பு, சுசீந்திரன் திரைப்படம் மதுரையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதால். அதனால் மதுரையில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் சிம்பு தங்கியுள்ளார்.
சிம்பு மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து 12பேர் அவரின் நண்பர்களும் அந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார்கலாம், இதனால் தயாரிப்பாளருக்கு படம் துவங்குவதற்கு முன்பே செலவு வைக்கிறார் என கிசுகிசு கிளம்பி விட்டது. அதுமட்டுமில்லாமல் சிம்பு இன்னும் திருந்தவே இல்லை என்றும் பலரும் கூறி வருகிறார்கள்.
சிம்புவுடன் ஹோட்டலில் இருப்பது பாடிகார்ட் இல்லை என்றும் அவர்கள் சிம்புவின் நண்பர்கள் எனவும் கூறுகிறார்கள். எது எப்படியோ சிம்பு இந்த திரைப்படத்தையாவது வெற்றிகரமாக முடிப்பாரா என கோலிவுட்டில் விவரமறிந்தவர்கள் கூறிவருகிறார்கள்.