30 கிலோ உடல் எடையை குறைப்பதற்கு நடிகர் சிம்பு இத்தனை நாள்தான் எடுத்துக் கொண்டாராம்..! உண்மையை உடைத்த இயக்குனர் வெங்கட் பிரபு..!

simbu-01
simbu-01

ஆரம்பத்தில் பல்வேறு மெகாஹிட் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் சிம்பு அதன்பிறகு தன்னுடைய அலட்சியத்தால் பல்வேறு தரப்பினரிடமும் கோபத்தை மட்டுமே சம்பாதித்தார் இதன் காரணமாக எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் பலகாலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

அவர் நடித்துக் கொண்டிருந்த மாநாடு திரைப்படம் கூட கால்ஷீட் பிரச்சனை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் பிரபல நபர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியதன் காரணமாக மீண்டும் சுரேஷ் காமாட்சி மாநாடு திரைப்படத்தை தொடங்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் நடிகர் சிம்புவும் தான் நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சரியான நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவதும் சரியான முறையில் தயாரிப்பாளர்களிடம் நடந்து கொள்வதும் பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிக கண்ணியமாக நடந்து கொண்ட நடிகர் சிம்பு மாநாடு படப்பிடிப்பை உரிய நேரத்தில் முடித்து கொடுத்துவிட்டார் மேலும் இத் திரைப்படமானது ஒரு த்ரில்லர் திரைப்படமாக அமையும் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா பிரேம்ஜி மனோஜ் பாரதிராஜா கருணாகரன் என பல்வேறு முக்கிய பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு இத்திரைப்படத்தின் மீது அதிகரித்துள்ளது.

மேலும் இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என நினைத்து நிலையில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாவதன் காரணமாக மாநாடு திரைப்படத்தின் தேதி மாற்றம் செய்யப்பட்டது இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் பஅனுபவத்தை வெங்கட்பிரபு சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

அப்போது அவரிடம்  நடிகர் சிம்பு எப்படி தன்னுடைய உடல் எடையை இந்த அளவிற்கு குறைத்தார் என கேட்டுள்ளார்கள் அதற்கு பதிலளித்த வெங்கட்பிரபு அவர்  வெரும் நீர் ஆகாரம் மட்டும் எடுத்துக் கொண்டது மட்டுமில்லாமல் 30 கிலோ எடையை குறைக்க அவருக்கு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.

simbu
simbu

அந்தவகையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆனாலும் படத்தின் வெற்றிக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.  மேலும் இந்த திரைப்படம் வித்தியாசமான திரைப்படம் என்பதால் ரசிகர்கள் இதனை அதிக அளவு ரசிப்பார்கள்  என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.