குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை ஆரம்பித்த நடிகர் சிம்பு. ஒரு கட்டத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து ஓடி கொண்டு இருந்த அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என பலரும் சொல்லி வந்தனர் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நடிகர் சிம்பு படங்களில் சரியாக படத்தில் கமிட் ஆகாமல் இருந்தார்.
அப்படியே கமிட் ஆனாலும் அந்த படத்திற்கு சரியான நேரத்திற்கு போவதுமில்லை என நடிகர் சிம்பு மீது பல புகார்கள் எழுப்பப்பட்டது. மேலும் சிம்புவும் உடல் எடையை அதிகரித்து மாறிப்போனார். இதனால் அவரது சினிமா பயணம் க்ளோஸ் என பலரும் கருதிய நிலையில் திடீரென உடல் எடையை குறித்து கம்பேக் கொடுத்து உள்ளார்.
நடிகர் சிம்பு. இப்போ இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறுகின்றன. அந்த வகையில் மாநாடு திரைப்படம் 100 கோடி வசூல் அள்ளியது அதனைத் தொடர்ந்து சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு. இந்த திரைப்படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது இரண்டு நாட்களில் மட்டுமே 25 கோடி வசூல் செய்து இருக்கிறது.
வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளும் என பெரிய வருகிறது. இதனால் விட்ட இடத்தை பிடிக்க நடிகர் சிம்பு ரெடியாக இருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் கௌதம மேனன் சமீபத்தில் சில விஷயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.
நடிகர் சிம்புவுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் லெவலுக்கு வர எல்லா சாதகங்களும் இருக்கிறது என்றும், நடிகர் சிம்பு கௌதம் உடன் அவருடைய வீட்டில் தங்கி இருந்தாலே தன்னால் சிம்புவை அந்த இடத்திற்கு கொண்டுவர முடியும் என கூறி இருந்தார். இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.