பல பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது தான் நடிகர் சிம்பு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.அந்த வகையில் தற்போது மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
இதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் பத்து தல திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்திற்காக சிம்புவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகிறார்கள்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிம்பு தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.பல ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்கள் என்று அனைவரும் வாழ்த்துக்களை கூறி வந்தார்கள்.
அந்தவகையில் சிம்புவின் சகோதரி மகன் பிறந்தநாள் பரிசு ஒன்றை வழங்கி உள்ளார். அவ்வப்போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சிம்பு.
அதில் விலைமதிப்பில்லாத பரிசு என்று கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த வீடியோ. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
.