actor simbu :இந்த வருடம் சினிமாவில் நடித்த பல பிரபலங்களுக்கு திருமணமானது அவர்களெல்லாம் ஹனிமூன் கொண்டாடுவதற்காக பல இடங்களை தேர்வு செய்து போயிருக்கிறார்கள்.
அந்த வகையில் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் ஒரு சில நடிகைகள் மாலத்தீவுக்கு போய் தனது ஹனிமூன் கொண்டாடி வருகிறார்கள்.
மேலும் நடிகர் சிம்பு அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக அங்கே போக உள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.சிம்பு தற்போது உடல் எடை குறைத்ததால் அவரைத்தேடி அடுத்தடுத்த திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தன. அதில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை முடித்துவிட்டு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் படத்திற்கான ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.
மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
மாநாடு படம் முடிந்ததும் சிம்பு அடுத்ததாக மப்டி திரைப் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறாராம் அந்த படத்திற்கான சூட்டிங் மாலத்தீவில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வால், சமந்தாவை தொடர்ந்து நடிகர் சிம்பு படத்திற்கு சூட்டிங் செல்கிறார் என்று கூறிவருகிறார்கள்.