நடிகர் சிம்பு தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் அண்மைகாலமாக வெளிவரும் படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாக மாறுகின்றன. கடைசியாக கூட வெளியான நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம். மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலில் 100 கோடி அள்ளி சாதனை படைத்தது.
அதனால் செம்ம சந்தோஷத்துடன் நடிகர் சிம்பு அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் கையில் தற்பொழுது மஹா, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சிம்பு பல்வேறு புதிய படங்களில் கமிட் ஆகி உள்ளார்.
கன்னடத்தில் உருவான மப்டி படத்தின் ரீமேக் தமிழில் உருவாகிறது அந்த படத்திற்கு தற்போது பத்து தல என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் தற்போது சிம்பு விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் நிச்சயம் சிம்புவுக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை..
ஏனென்றால் கன்னடத்தில் நல்ல வெற்றியை ருசித்ததால் தமிழ்நாட்டிலும் வெற்றியை ருசிக்கும் என கூறப்படுகிறது இந்த படத்திற்காக சிம்பு ரொம்ப மெனக்கெட்டு நடித்து வருகிறாராம். இந்த படத்தின் கதைப்படி நடிகர் சிம்பு உடல் எடையை அதிகரித்து நடிக்க வேண்டும் என கூறப்படுகிறது அவருடைய சமீபத்திய புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒல்லியாக இருந்த சிம்புவா இது இப்படி குண்டாக மாறிடாரே எனக்கூறி புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாக உள்ளனர். மேலும் லைக்குகளையும், கமெண்டுகளையும் ஒரு பக்கம் அள்ளி வீசி போட்டு வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் உடல் எடையை அதிகரித்து இருக்கும் நடிகர் சிம்பு.