தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு தன்னை ஒரு நடிகராக மட்டும் தக்க வைத்துக் கொள்ளாமல் பாடகராகவும், இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும் தன்னை மாற்றிக்கொண்டு இப்பொழுது சிறப்பாக ஓடுவதால் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவராக சிம்புவுக்கு இருந்து வருகிறார்.
தனது பயணத்தை தொடர்ந்தது இலிருந்து சினிமாவை பார்த்து உள்ளதால் சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு புரிந்து வைத்துக் கொண்டுள்ளார் மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பவர்களின் நடிகர் சிம்புவும் ஒருவர். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான மாநாடு திரைப்படம் கூட மிக பிரமாண்ட வெற்றியை ருசித்தது.
அதை தொடர்ந்து இப்போது பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறாராம் முதலாவதாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் அதை முடித்துவிட்டு அடுத்ததாக பத்து தல, கொரோனா குமார் மற்றும் பல்வேறு சிறந்த இயக்குனருடன் கதை கேட்டு அடுத்தடுத்து நடிக்க ரெடியாக இருக்கிறார் இந்த நிலையில் இன்று சிம்புவின் 39 வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.
பிறந்தநாள் அதுவுமாக ரசிகர்களை சந்தித்து சிறப்பான சம்பவம் ஒன்றை செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் துபாய் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு துபாயில் கோல்டன் விசா கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு துபாய் அரசு அவருக்கு கோல்டன் கோல்டன் விசா கொடுத்து அழகு பார்க்கிறது.
ஏற்கனவே துபாய் அரசின் கோல்டன் விசா ஏற்கனவே மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், அமலாபால், மீரா ஜாஸ்மின், திரிஷா, பாடகி சித்ரா போன்றவர்களை தொடர்ந்து இப்பொழுது சிம்புவும் பெற்று இந்த லிஸ்டில் இணைந்துள்ளார் இதனை அறிந்த ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.