சிம்புவை கண்ணீரில் மூழ்கடித்த தீவிர ரசிகை!! தீயை பரவும் கடிதம்.

simbu23

actor simbu fan emotional letter viral: நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைபடத்தில் நடித்து கொண்டிருக்கிறார் . இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது. அதனை தொடர்ந்து இவர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து மாநாடு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

சிம்பு தனது உடல் எடையை குறைத்து பார்க்கவே அழகாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் சமூக வலைத்தளமான ட்விட்டரில் இணைந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அதனைத் தொடர்ந்து சிம்புவின் தீவிர ரசிகையான அங்கிதா சமூக வலைத்தளத்தில் சிம்புவிற்கு கடிதம் ஒன்றை எழுதி பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டதாவது உங்களது படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை பார்த்து மெய்சிலிர்த்தது பேச்சே வரவில்லை, உங்களின் வசனங்கள், பாடல், படம் இவை அனைத்துமே எனக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருந்தது அதற்கு நன்றி எனவும் கூறியிருந்தார்.

அதோடு மட்டுமல்லாது கடந்த மூன்று நாட்களாக தொண்டை வலி, தலைவலி மற்றும் காய்ச்சல் இதனால் என் வாழ்வில் அடுத்தது என்ன நடக்கும் என எனக்கு தெரியாது வாழ்க்கை நிலையற்றது என்பதை நான் உணர்ந்தேன் என பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்து நடிகர் சிம்பு வருந்தியதாக அவரது நெருங்கிய நண்பரான மகத் அவர்கள் தெரிவித்துள்ளார்.இதோ அந்த கடிதம்..

simbu-fan tweet
simbu-fan tweet
simbu-tweet-1-fan