அஜித் படத்தை பார்த்துவிட்டு பிரபல இயக்குனரிடம் கோபப்பட்ட நடிகர் சிம்பு – வெளிவரும் ரகசியம்.!

simbu
simbu

நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து  கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்த காடு. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக  பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

நடிகர் சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். சிம்பு எந்த அளவிற்கு அஜீத்தின் தீவிர ரசிகர்கள் அஜித் திரைப் படத்தை முதல் நாளே ஷோ பார்த்து விடுவாராம். எந்த ஒரு வேலையில் இருந்தாலும் அஜித் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த விடுவாராம் அப்படித்தான் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

நடிகர் சிம்பு ஒஸ்தி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது அஜித்தின் 50-வது திரைப்படமான மங்காத்தா திரைப்படம் ரிலீஸ் ஆனது இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கி இருந்தார் மங்காத்தா படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மகத்,  அஞ்சலி, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, திரிஷா, பிரேம்ஜி, அஸ்வின் மற்றும் பலர் நடிப்பில் அசத்தியிருந்தனர்.

இந்த படம் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது. அஜித்தின் மங்காத்தா படம் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க அப்பொழுது ஒஸ்தி படத்தின் ஷூட்டிங்கை கூட கண்டுகொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி  மங்காத்தா படத்தை பார்க்க வந்துள்ளாராம்.

படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு காட்சியில்  அஜித் உடன் மகத், பிரேம்ஜி  போன்றவர்கள் நடனமாடி இருந்தனர். இதை பார்த்து கோபம் போட்டு வெங்கட்பிரபுவிடம் கத்தினாராம். அவர் கத்த காரணம் அஜித் படத்தில் பிரேம்ஜி, மகத் கெல்லாம் ஒரு தனிப் பாடலா அதைக் கேட்டு தான் கத்தினாராம் வெங்கட் பிரபுஓகே பேட்டியில் தெரிவித்தார்.