நானும் STR ஒன்னு சேர்ந்தா பயங்கரமா இருக்கும் என கூறிய பிரபலம்.!

simpu
simpu

தமிழ் சின்னத்திரையில் இதுவரையிலும் எந்த ரசிகர்களும் பார்க்காத அளவிற்கு சர்ச்சைகளையும் தோல்களும் சந்தித்து தற்போது மீண்டும் அவதாரம் எடுத்து தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் நடிகர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு ஆரம்பித்தார்.

பிறகு நன்றாகப் போய்க் கொண்டிருந்த நிலையில் வயதுக் கோளாறின் காரணமாக நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்ததால் இவரை நம்பி திரைப்படங்களை எடுத்து வந்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. அந்த வகையில்  அதிகப்படியான சண்டை, உடல் எடை கூடி, ரெட் கார்ட் போன்றவற்றை பெற்றதால்  இதற்கு மேல் சினிமாவில் நடிப்பாரா என்பதே கேள்விக்குறியாக இருந்து வந்தது.

இருந்தாலும் தற்பொழுது அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் வெளிவந்து கௌதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். எனவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் மிகவும் சுறுசுறுப்பாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருவதால் அனைத்து ரசிகர்களும் மிகவும் ஆவலாக காத்து வருகிறார்கள்.

சமீபத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதிலும் தன்னால் முடிந்தவரை தொகுப்பாளராக தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தி மிகவும் காமெடியாகவும் கொண்டு சென்றார். இந்நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல சம்பளம் கிடைத்ததால் தற்போது புதிதாக ஒரு வீடு கட்டி வருகிறார் என்று கூறப்படுகிறது.

 அதுவும் தற்பொழுது இவர் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் ஈ. சி. ஆரில் ஒரு மிகப் பெரிய பங்களாவை கட்டி வருகிறார்.  எனவே இதன் பணிகள் முடிந்த பிறகு திருமணம் நடக்கும் என்று அவரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.  இதனைக் கேட்டு அவருடைய ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

aniruth-2
aniruth-2

இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் அனிருத் மேடையில் நானும் சிம்புவும் ஒன்று சேர்ந்தால் பயங்கரமாக இருக்கும் என்று கூறி உள்ளார் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.