தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு பிரபலமான நமது நடிகர் குழந்தை நட்சத்திரமாக இருக்கும்பொழுதே திரையுலகில் அறிமுகமானது மட்டுமில்லாமல் படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.
அந்த வகையில் நடிகர் சிம்பு சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் திரைப்படமானது மாபெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்துள்ளது.
அந்த வகையில் தற்போது நடிகர் சிம்புவை வைத்து திரைப்படம் இயக்குவதற்கு பல்வேறு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் சிம்பு தற்சமயம் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு, கொரோனா குமார்,பத்து தலை ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பில் இருப்பது மட்டுமில்லாமல் திரை உலகில் அவர் மீது இருந்த பல்வேறு சர்ச்சைகளும் படிப்படியாக நீங்கி வருகிறது.
இந்நிலையில் நடிகர் சிம்பு உடல்நிலை குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் வெளிவந்த செய்தியும் மூலமாக ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
அந்த வகையில் நடிகர் சிம்புவுக்கு தற்போது வைரஸ் தொற்று ஏற்பட்டது மட்டும் இல்லாமல் தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. இவ்வாறு வெளிவந்த செய்தியை கேட்ட அவருடைய ரசிகர்கள் சிம்பு விரைவில் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.