கோ படத்தில் முதலில் ஹீரோவாக நடித்திருந்த சிம்பு!! ஜீவாவோட இவர் தான் செம்ம மாஸ்!! வைரலாகும் புகைப்படங்கள்.

simbu-ko-movie-02

பல படங்களில் ஆரம்பகட்டத்தில் சில நடிகர் நடிகைகள் கமிட்டாகி அதில் நடித்து வருபவர்கள். அதன்பிறகு தயாரிப்பாளர்களுடன் ஏற்படும் வேறு சில பிரச்சனைகளால் அத்திரைப்படத்தில் இருந்து பாதியிலேயே அவர்கள் அத்திரைப்படத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். மேலும்  முதலில் நடிக்க இருந்த நடிகர் நடிகைகளை விட இரண்டாவதாக நடிக்கும் நடிகர் நடிகைகள் மிகவும் சிறப்பாக அந்த திரைப்படத்தில் நடித்து இருப்பார்கள்.

அந்த வகையில் சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை வேண்டாம் என்று கூறியவர் தான் நடிகர் சிம்பு. இவர் தனது சின்ன வயதில் இருந்தே நடித்து வந்ததால் சினிமாவில் இவருக்கு என்று ஒரு இடம் உள்ளது .அந்த வகையில் இவர் ஹீரோவாக அறிமுகமாகும் பொழுது இளம் வயது பையனாக இருந்ததால் தலக்கணம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது எனவே நல்ல திரைக்கதையாக இருந்தாலும் அந்த திரைப்படத்தை வேண்டாம் என்று கூறிவிடுவார்.

மேலும் இவர் நடித்து வந்த பல படங்களையும் பாதியிலேயே விட்டுவிட்டு வந்துள்ளார். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்து இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் கோ. இத்திரைப்படம் இளைஞர்களுக்கும் அரசியல் வேண்டும் என்பதை உணர்த்திய ஒரு திரைப்படமாக அமைந்தது.

அந்தவகையில் சிம்பு இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் இவருக்கு ஜோடியாக நடிகை ராதிகாவின் மூத்த மகள் கார்த்திகா திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரை தொடர்ந்து நடிகை பியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதோடு நடிகர் அஜ்மல், ஜெகன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.

simbu-ko-movie
simbu-ko-movie
simbu-ko-movie-01
simbu-ko-movie-02

 

இத்திரைப்படத்தில் முதலில் ஜீவாவுக்கு பதிலாக சிம்பு தான் நடிக்க இருந்தார் என்பதை தயாரிப்பாளர் பல பேட்டியில் கூறியுள்ளார். அந்த வகையில் இத்திரைப்படத்தில் நடிகர் சிம்பு பல காட்சிகளில் நடித்துள்ளார். அதன்பிறகு தயாரிப்பாளரிடம் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இத்திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். இந்நிலையில் கோ திரைப்படத்தில் சிம்பு நடித்திருந்த பல காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.