சினிமாவுலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி விஜய் அஜித் ஆகிய நடிகர்களின் படங்களில் நடிக்க வளர்ந்து வரும் நடிகர் நடிகைகள் நடிக்க ஆசை படுவது வழக்கம் ஆனால் அது அனைவருக்கும் கிடைக்குமா என்றால் அது கேள்விக்குறிதான்.
ஒரு சிலர் அவருடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று நடித்து விடுவார்கள் ஒரு சிலர் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தும் சில காரணங்களால் தவிர்த்து விடுவது வழக்கம் அந்த வகையில் தளபதி விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று ஒரு கட்டத்தில் தவிர்த்து உள்ளார் நடிகர் சித்தார்த் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருபவர் நடிகர் சித்தார்த்.
தமிழ் சினிமாவில் 180, உதயம் NH 4, காதலில் சொதப்புவது எப்படி, சிவப்பு மஞ்சள் பச்சை, ஜிகர் தண்டா போன்ற பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சித்தார்த். இவர் தளபதி விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை வைத்திருக்கும் இயக்குனர் ஷங்கர்.
அவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2012 ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் நண்பன். இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் கைகோர்த்து இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி இருந்தனர். இந்த படத்தில் ஜீவா நடித்த கதாபாத்திரத்தில் முதன்முதலில் படக்குழு.
நடிகர் சித்தார்த்தை தான் நடிக்க வைக்க உள்ளது. ஆனால் அவரோ சில காரணங்களால் தளபதி விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டு உள்ளாராம். இச்செய்தி இணையதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது