ரசிகர்கள் நினைப்பதை விட பயங்கரமாக இருக்கும்.? இந்தியன் 2 அப்டேட் கொடுத்த நடிகர் சித்தார்த்

indian-2
indian-2

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் எடுக்கும் ஒவ்வொரு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றி தான் அதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.. சிறு இடைவேளைக்கு பிறகு ஷங்கர் எடுத்து வரும் திரைப்படம் கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 2.. குறிப்பாக இந்தியன் 2 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

காரணம் ஏற்கனவே வெளிவந்த இந்தியன் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட வந்த நிலையில் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் சூட்டிங் எடுக்கப்பட்டது படத்தின் கமலுடன் இணைந்து சித்தார்த், பிரியா பவானி சங்கர் ராகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால்..

சமுத்திரகனி, பாபி சிம்ஹா, தீபா ஷங்கர், ஆடுகளம் நரேன், தம்பி ராமையா ஜெயபிரகாஷ், டெல்லி கணேஷ், மற்றும் பல திரைப்படங்கள் சூப்பராக நடித்து வருகின்றனர். இந்தியன் 2 படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இது ஒரு பக்கம் இருக்க..

மறுப்பகம் இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரனை வைத்து  எடுத்து வரும் கேம் சேஞ்சர் என்னும் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் சித்தார்த்த இந்தியன் 2 திரைப்படம் குறித்த ஒரு சூப்பரான அப்டேட்டை கொடுத்துள்ளார் அதில் அவர் சொன்னது.. என் குரு கமலஹாசன் உடன் இணைந்து நடிப்பதை வாழ்நாள் வாய்ப்பாக நினைக்கிறேன்.

இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பதை விட 10 மடங்கு அதிக பூர்த்தியை தரும் என அடித்து கூறி உள்ளார் நடிகர் சித்தார்த்.. இந்த தகவல் தற்போது கமல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது மேலும் இந்த படம் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது எனக் கூறியும் கமெண்ட் அடித்தும் வருகின்றனர்.