நடிகர் சித்தார்த் சினிமா உலகில் முதலில் இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வந்தார். அந்த வகையில் மணிரத்தினதிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் ஒரு கட்டத்தில் இவரது அழகையும் திறமையும் பார்த்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் திரைப்படத்தில் ஹீரோவா நடித்து அறிமுகமானார்.
அதன் பின் தமிழ் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து ஓடினார் இருப்பினும் இவரது வெற்றி படங்கள் குறைவு. இருந்தாலும் தொடர்ந்து வருகின்ற படங்களில் நடித்து இப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கிறார் நடிகர் சித்தார்த் படங்களில் எப்படி பிரபலமாக பேசப்படுகிறாரோ அதுபோல் அதிகளவுக்கு சர்ச்சையிலும் சிக்கி உள்ளார் நடிகர் சித்தார்த்.
2002 ல் மகாராஷ்டிராவை சேர்ந்த மேகநாதன் என்ற பின்னணி பாடகியை காதலித்து திருமணம் செய்தார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார். பின்னர் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக 2007 ஆம் ஆண்டு பிரிந்தனர் அதன் பின் நடிகர் சித்தார்த் தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சுருதிஹாசன் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டு பின் இருவரும் காதலித்தனர்.
இவர்கள் இருவரும் திருமணம் ஆகாமல் தனியாக வாழ்ந்து வந்தனர் ஒரு கட்டத்தில் சுருதிஹாசன் செய்தது சித்தார்த்துக்கு பிடிக்காமல் போக இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு நடிகர் சித்தார்த் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றுதான் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருந்தனர்.
இரு வீட்டாருக்கும் இவர்கள் நெருங்கி பழகுவது தெரிய ஆரம்பித்தது திருமணம் வரை சென்று கடைசியில் சித்தார்த்தின் நடவடிக்கை பிடிக்காமல் போக சமந்தா வீட்டுக்காரர்கள் இதிலிருந்து விலக ஆரம்பித்தனர். இப்பொழுது காற்று வெளியிடை நடிகை அதிதி உடன் சித்தார்த் காதல் செய்து வருவதாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சித்தார்த்த த்ரிஷா ஆண்ட்ரியா அமலா பால் என்ன பல நடிகைகளுடன் காதலில் இருந்தார் என சொல்லப்படுகிறது.