திருமணத்தில் முடிந்த சித்தார்த், அதிதி ராவ் காதல்.. ட்ரெண்டிங் போட்டோஸ்

திரை உலகில் கடந்த சில மாதங்களாக விவாகரத்து செய்திகளாக வந்து கொண்டிருந்தது. அதனால் ரசிகர்கள் கூட கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். அதை போக்கும் வகையில் தற்போது சித்தார்த், அதிதிராவ் ஜோடி இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

siddharth-aditi rao
siddharth-aditi rao

பல மாதங்களாக காதலித்து வந்த இவர்கள் சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதை தொடர்ந்து இவர்களுடைய திருமணம் 400 வருட பழமையான வனபர்த்தி கோவிலில் நடைபெற்றுள்ளது.

siddharth-aditi rao
siddharth-aditi rao

அந்த போட்டோக்கள் தான் இப்போது இணையதளத்தை ஆக்கிரமித்து உள்ளன. ரொம்பவும் எளிமையான உடையில் இருக்கும் இந்த ஜோடி மணக்கோலத்தில் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டுள்ளனர்.

காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடிந்த சந்தோஷம் அவர்கள் முகத்தில் நிரம்பி வழிகிறது. தற்போது இந்த ஜோடிக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.