தமிழருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தன்னுடைய மகனுக்கு போராளியின் பெயரை வைத்த சிபிராஜ்.! இணையதளத்தில் தீயாய் பரவும் ட்விட்

sibiraj

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சிபிராஜ் இவர் பிரபல முன்னணி நடிகர் சத்யராஜின் மகன் ஆவார், இவர் முதன்முதலில் 2003 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளியாகி ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து இன்று மன்னனின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

நடிகர் சிபிராஜ் கடைசியாக சத்யா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், மேலும் தற்பொழுது மாயோன், ரங்கா ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகர் சிபிராஜ் ரேவதி என்ற பெண்ணை 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

sibiraj
sibiraj

இவர்கள் திருமணத்துக்கு முன்பே 10 ஆண்டுகள் நண்பர்களாக பழகி வந்தவர்கள், இந்த நிலையில் தற்போது பிறந்துள்ள தன்னுடைய பிள்ளைக்கு நடிகர் சிபிராஜ் வைத்த பெயர் மிகவும் பெருமைப்படுவதாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை படுகிறேன்!” என கூறியுள்ளார். சிபிராஜ் மகனுக்கு தீரன் சின்னமலை என பெயர் வைத்துள்ளார்.