கடன் நெருக்கடி!!75 கோடி சம்பளம் !! நடிக்க ஒப்புக் கொண்டாரா, இல்லையா சிவகார்த்திகேயன்!! இதோ அவர் கூறிய பதில்.

sivakarthikeyan-001
sivakarthikeyan-001

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக பங்குபெற்று இதன் மூலம் பிரபலமடைந்து தொகுப்பாளராக சில ஆண்டுகள் பணியாற்றி தனது பேச்சுத் திறமையினால் அனைவரையும் கவர்ந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

மற்ற நடிகர்களை விடவும் இவரின் திரைப்படத்தை குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று பார்க்கும் வகையில் அமைவதால் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக விளங்குகிறார். இவ்வாறு பிரபலமடைந்துள்ள இவரின் ரசிகர்கள் இவரை எஸ்கே என்று அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தொடர்ந்து இவர் டாக்டர், அயலான், டான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். டாக்டர் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆவதை தொடர்ந்து அயலான் திரைப்படமும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து வருகிறது. ஆனால் டான் திரைப்படம் தான் முடிவடையாமல் தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களை வளைத்துப் போட்டு  வரும் நிலையில் தற்போது சிவகார்த்திகேயனயும் மிகப்பெரிய பட்ஜெட்டில் வைத்து போட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து ஐந்து திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க சொன்னதாகவும் அதற்கு ரூபாய் 75 கோடி சம்பளம் என்றும் அட்வான்ஸ்சாக 15 கோடி தருவதாகவும் டீல் பேசினார்களாம். ஆனால் இதற்கு சிவகார்த்திகேயன் மறுத்துவிட்டாராம்.

இந்த தகவல் சமீப காலங்களாக சோஷியல் மீடியாவில் வைரலான நிலையில் சமீபத்தில் சிவகர்த்திகேயணினி நெருங்கிய வட்டாரங்களில் இதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை என்றும் ஒரு நிறுவனம் ஒரே நடிகரை வைத்து தொடர்ந்து 5 திரைப்படங்களை தயாரிப்பது என்பது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார்கள்.