சத்தம் இல்லாமல் யாரும் செய்யாத விஷயத்தை செய்த சிவகார்த்திகேயன்.! நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..

sivakarthikeyan
sivakarthikeyan

சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமடையும் நடிகர், நடிகைகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது என்றுதான் கூறவேண்டும்.  அந்த அளவிற்கு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தொடர்ந்து ஏராளமான நடிகர் நடிகைகள் அறிமுகமாகி வருகிறார்கள்.

அந்த வகையில் தொகுப்பாளராக பணியாற்றி வெள்ளித்திரையில் தற்போது அசுர வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.  காமெடியாக தொடங்கி தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்து வருகிறார்.

அதோடு இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்துள்ளது.  இவ்வாறு இந்த வெற்றியினால் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரையும் ஓவர்டேக் செய்து உள்ளார்.

அந்த வகையில் விஜய்,அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு தான் செல்வாக்கு அதிகமாக இருந்து வருகிறது.  இவ்வாறு பிரபலமடைந்துள்ள இவர் தொடர்ந்து சத்தமில்லாமல் ஏராளமான உதவிகளை பலருக்கு செய்து வருகிறார்.  அந்த வகையில் தற்போது வெளிவந்த தகவல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்புபது,பாடுவது,  பாடல் எழுதுவது  போன்ற பல வித்தைகளை கைவசம் வைத்துள்ளார்.  இவ்வாறு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் பாடல் எழுதி இருந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இவ்வாறு இதன் மூலம் கிடைத்த வருமானத்தை இவர் கவிஞர் நா.முத்துகுமாருக்கு கொடுப்பதை தற்போது வரையிலும் வழக்கமாக வைத்துள்ளார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் எண்ணற்ற பாடல்களை பாடி உள்ள நா முத்துக்குமார் கடந்த 2016ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் திடீரென்று மரணம் அடைந்தார்.  இது தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு,  இவ்வாறு சில காலங்கள் அதிர்ச்சியில் இருந்து வந்தாலும் அனைவரும் பிறகு அதனை மறந்து விட்டார்கள்.

ஆனால் சிவகார்த்திகேயன் மட்டும் தான் பாடல் எழுதுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அப்படியே நா முத்துக்குமாரின் வீட்டிற்கு கொடுத்து விடுவாராம்.  இதனைப் பற்றி நீண்ட காலங்கள் கழித்து வெளிவந்த தகவலின்படி சிவகார்த்திகேயனிடம் கேட்கும் பொழுது நான் விளம்பரத்திற்காக செய்யவில்லை என் மனசாட்சிப்படி செய்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே இதனை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.