மலையாள நடிகையுடன் முதன் முறையாக ஜோடி போடும் நடிகர் சிவகார்த்திகேயன்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.

sivakarthikeyan
sivakarthikeyan

சின்னத்திரையில் போட்டியாளராக பங்கு பெற்று தனது சிறந்த பேச்சி திறமையினால் தொடர்ந்து பல ஆண்டுகள் தொகுப்பாளராக பணியாற்றி வந்து இதன் மூலம் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.  விஜய் டிவியில் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

பிறகு இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இவருக்கு வெள்ளித்திரை நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.  இந்நிலையில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.  இவர் நடிப்பில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் வெளி வரும் நிலையில் தற்பொழுது வருகின்ற மே 13 ஆம் தேதி அன்று தான் திரைப்படம் வெளியாக இருக்கின்றது.

இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து நவீன் குமார் இயக்கத்தில் அயலான் படம் ரிலீஸாக உள்ளது.அந்த திரைப்படத்தின் போஸ்டர் புரோமோஷன் வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.  பிறகு அனுதீப் இயக்கத்தில் தயாராகும் SK 20, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK 21 படங்களில் நடிக்க இருக்கிறார்.

இவ்வாறு SK 21 படத்தின் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்திய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இருக்கின்றது.  ரங்கூன் திரைப்படத்தினை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இத்திரைப்படத்தினை இயக்கவுள்ளார். இந்த தகவல் வெளிவந்ததில் இருந்து மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை சாய் பல்லவி நடிக்க இருக்கிறார் என்று அதிகாரபூர்வமான தகவல் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முதன் முறையாக சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடிக்கவுள்ளார்கள்.