பொதுவாக ஒரு முன்னணி நடிகருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கும் நிலையில் அந்த நடிகர் ஒரு திரைப்படத்தில் நடித்து வந்தார் என்றால் அந்த திரைப்படம் இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என்று பல வதந்திகள் வருவது வழக்கமாக இருந்து வருகிறது. ஒரு சில வதந்திகள் உண்மையானதாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என்று சில தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் போட்டியாளராக பங்கு பெற்று அதன் மூலம் வெற்றி பெற்று பிரபலமடைந்த இவருக்கு தொகுப்பாளராகவும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
விஜய் டிவியில் தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் தனது விடா முயற்சியினால் திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்தார்.அந்த வகையில் இவர் நடித்த முதல் சில திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. இருந்தாலும் மனம் தளராத இவர் தொடர்ந்து தனது விடாமுயற்சியினால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
இவ்வாறு இவரின் அசுர வளர்ச்சிக்கு காரணம் தற்போது உள்ள இளைய தலைமுறையிணையும், குடும்பத்தை மையமாக வைத்தும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும் இருந்து வருகிறது. இவ்வாறு இவர் நடிப்பில் டாக்டர் போன்ற சில திரைப்படங்கள் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து தற்போது அட்லியின் துணை இயக்குனராக பணியாற்றிய அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியான ஜலபுலஜங்கு பாடலிலும் கல்லூரி மாணவனை போல்தான் தோற்றம் இருந்தது.
இப்படிப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தின் கதை இப்படித்தான் என்று கூறி புதிய கதை ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அப்படி திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல என்றும் பிறந்த முதல் நாள் முதல் முப்பது வயதுவரை ஏரியாவில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் குரல் கொடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன் .
இதன்மூலம் எப்படி பெரிய டான் ஆகிறார் என்பது தான் இந்த படத்தின் கதையாம். இதனை சிலர் இதேபோன்ற கதையை வைத்து ஏராளமான திரைப்படங்கள் வெளி வந்துவிட்டது என்று கூறி வந்தாலும் இன்னும் சில ரசிகர்கள் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனை படைக்கும் என்றும் கூறிவருகிறார்கள்.
இத்திரைப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு டாக்டர் திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து எஸ்ஜே.சூர்யா, சமுத்திரகனி, பாலசரவணன்,சிவாங்கி உள்ளிட்ட பலரும் நடித்து உள்ளார்கள் இத்திரைப்படம் மே 13ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.