சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தின் ட்ரைலர்.!

don
don

பல வருடங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் என்ற பெயரைக் கேட்டால் எவருக்கும் தெரியாது ஆனால் தற்போது அவரது பெயரை தெரியாத ஆட்களே இல்லை ஏனென்றால் தமிழ் சினிமாவில் தனக்கெனத் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன்,இதற்கெல்லாம் காரணம் தன்னுடைய கடின உழைப்பினால் ஒரு பெரிய போராட்டத்திற்கு பின்பு சினிமாவில் கால் ஊன்றி நின்றதுதான்.

இவர் முதன்முதலில் விஜய் டிவியில் நடந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஆனால் அதில் அந்த அளவிற்கு ஃபேமஸ் ஆகவில்லை. ஆனால் இது அவருக்கு சினிமா பட வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்ததால் அதில் அவரது திறமைகளை வெளிப்படுத்தி தற்போது தமிழ்சினிமாவில் தனக்கென தனிப் பெரும்பான்மையான ரசிகர்களை கொண்டுள்ளார்.

தற்பொழுது சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. டெய்லர் குறித்து மக்கள் தனது கருத்துக்களை வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றன.லைகா புரொடக்சன்ஸ் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சூரி, சமுத்திரக்கனி நடிப்பில் தான் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அடுத்த வாரம் படம் வெளியாக உள்ள நிலையில் இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிபிசக்கரவர்த்தி அட்லீயிடம் உதவியாளராக இருந்ததால் படத்தின் மீது ரசிகர்கள் மிகவும் பெரியளவிலான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எண்ணி வருகிறார்கள். மே 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று டான் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனைக் குறித்து ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் சிறப்பாக உள்ளதென தன் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அதோடு ட்ரெய்லர் மிகவும் திரில்லிங்கான இருப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்துவருகிறார்கள்.