நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்து மாபெரும் ஹிட் கொடுத்த நான்கு திரைப்படங்கள்..! ஒவ்வொன்றும் வேற லெவல் தான்..!

rajinikanth-sivaji-1

தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை சிவாஜி கணேசன் இவரை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் தன்னுடைய ஸ்டைலான நடிப்பில்  மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும்  கவர்ந்தது மட்டுமின்றி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த் இந்நிலையில் ரஜினி மற்றும் சிவாஜி ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுவத்தி எட்டாம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஜஸ்டிஸ் கோபிநாத் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை யோகநாத் அவர்கள்தான் இயக்கியிருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகர்களாக சிவாஜி கணேசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தது மட்டுமின்றி எம்எஸ் விஸ்வநாதன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

அதன்பிறகு கே விஜயன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் தான் படிக்காதவன் இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் மாபெரும் வெற்றி கண்டது. மேலும் இந்த திரைப்படத்தில் விஷ்ணுவர்தன் மற்றும் மாதவி ஆகியோர்களும் நடித்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சந்திரபோஸ் என்ற திரைப்படம் மனது ரஜினியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அண்ணனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் சிவாஜி கணேசன். மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிகை அம்பிகா நடித்துள்ளார்.

அதன் பிறகு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் படையப்பா திரைப்படத்தில் இவர்களை தவிர சௌந்தர்யா ரம்யா கிருஷ்ணன் நாசர் மணிவண்ணன் அப்பாஸ் என பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தந்தையாக நடித்திருப்பார் மேலும் இத்திரைப்படம் தமிழ் திரை உலகில் சுமார் 200 நாட்களுக்கும் மேல் ஓடி மாபெரும் வெற்றி கண்டு வசூலிலும் சாதனை படைத்தது.

sivaji rajini-2
sivaji rajini-2