இடி மின்னல் அரசன் லுக்கில் மிர்ச்சி சிவா..! இணையத்தில் கெத்து காட்டும் இடியட் பட போஸ்டர்..!

SHIVA
SHIVA

ரேடியோவில் தன்னுடைய குரலை ஒளிபரப்பாக்கி ரசிகர்களிடையே மதிப்பையும் மரியாதையும் கூட்டிக்கொண்டு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் சிவா. இவ்வாறு பிரபலமான நமது நடிகர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் கூட்டணியில் முக்கிய நபர் என கருதப்படுகிறது.

அந்த வகையில் இவர் சென்னை 6000028, சரோஜா போன்ற திரைப்படங்களில் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்தவர் இதனை தொடர்ந்து சிஎஸ் அமுதன் இயக்கத்தில் தமிழ்ப் படம் என்ற திரைப்படத்தில் சோலோ ஹீரோவாக அறிமுகமானார்.

இவ்வாறு தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து அகில உலக சூப்பர் ஸ்டார் என பட்டத்தைப் பெற்ற சிவா தற்போது தான் நடிக்கும் திரைப்படங்களில் புதிய புதிய ஸ்டைலில் தன்னுடைய நடிப்பை நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில் இவர் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக திரையில் பிரபலமான இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் தில்லுக்கு துட்டு என்ற திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கூட சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை தந்தன.

இந்த திரைப்படத்தில் நடிகர் சிவா கதாநாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் இத்திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி அவர்கள் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும் இத்திரைப்படத்தை ஸ்கிரீன்ஸ் இன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆனது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட்டுள்ளார்கள் இத்திரைப்படத்தில் அவருடைய லுக் இடிமின்னல் அரசன் தோர் கெட்டப்பில் இருப்பதன் காரணமாக இந்த புகைப்படமானது ரசிகர்கள் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.

meerchi shiva
meerchi shiva