நயன்தாராவுக்கு இப்போ அதுவும் அத்துபுடி..! விக்னேஷ் சிவனிடம் முன் கூட்டியே சொன்ன ஷாருக்கான்.. என்னவா இருக்கும்

nayanthara
nayanthara

nayanthara : பாலிவுட் பாஷா ஷாருக்கான் சில வருடங்களுக்குப் பிறகு நடித்த திரைப்படம் பதான். அந்த படம் வெளிவந்து வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வந்த  அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர். அண்மையில் படத்தின் டிரைலர்  வெளிவந்து மிரட்டியது. ஷாருக்கான் ஒரு பக்கம் ஆக்ஷனில் மிரட்ட மறுபக்கம் நயன்தாராவும் துப்பாக்கி உடன் வேற மாதிரியான லுக்கில் இருந்த சீன்களும் வெளிவந்தன.

டிரைலரை பார்த்த பலரும்  நல்லவிதமான கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர் லியோ பட இயக்குனர்  லோகேஷ் புகழ்ந்து தள்ளியது அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜவான் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு  சிறப்பாக வந்துள்ளதாக கமெண்ட் அடித்தார்.

இதற்கு ரிப்ளை செய்த ஷாருக்கான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் நயன்தாரா இப்ப அடிக்க உதைக்க  நன்றாக கற்றுக் கொண்டார் என கூறினார் இதற்கு விக்னேஷ் சிவன் சொன்னது ஆமாம் சார் பார்த்து தான் இருக்கணும் என கூறியுள்ளார் மேலும் பதிவிட்ட விக்னேஷ் சிவன் படத்தில் உங்களுக்கும், நயனுக்கும் ரொமான்ஸ் காட்சிகள் இருப்பதாக கேள்விப்பட்டேன்..

ரொமான்ஸ் கிங் இடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுகொண்டு இருப்பார் என நினைக்கிறேன். உங்கள் படத்தின் மூலம் அவர் ஹிந்தியில் அறிமுகமாகி இருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம் என இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.