5வது நாளில் பாதியாக குறைந்த ஜவான் பட வசூல்.. ஷாக்கில் ரசிகர்கள்

jawan
jawan

Jawan Box Office: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் 5வது நாள் வசூல் குறித்த நிலவரம் வெளியாகி உள்ளது. கடந்த வியாழன் கிழமை அன்று உலகம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் வெளியான ஜவான் திரைப்படம் 4 நாட்களில் வசூல் வேட்டையை நடத்தியுள்ளது.

நாள்தோறும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் திங்கட்கிழமை நேற்று அதிரடியான வசூல் நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் நேற்று வசூல் எதிர்பார்த்ததை விட 50 கோடி குறைந்திருப்பதாக கூறப்படும் நிலையில் தினமும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது அப்படி 5வது நாள் வசூல் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

ஜவான் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி ஆகியோர்கள் இணைந்து நடித்திருக்கும் நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திறந்தார். வெளியான 4நாளில் இருந்து நாள்தோறும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது ஆனால் 5வது நாளில் பாதியாக குறைந்துள்ளது. 5 நாட்களில் ஜவான் திரைப்படம் உலக அளவில் 600 கோடியை தாண்டி விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஆனால் தற்பொழுது அது நடக்காமல் போய் உள்ளது.

ஜவான் திரைப்படம் திங்கள்கிழமை வரை 520 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் கூடுதலாக 5வது நாளில் வரும் 54 கோடி ரூபாய் மட்டுமே உலகளவில் வசூல் செய்துள்ளது. 10வது நாளில் ஜவான் திரைப்படம் 1000 கோடி வசூலை தாண்டி ஷாருக்கான் சென்சுரி அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது இவ்வாறு பாதியாக குறைந்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனை அடுத்து ஷாருக்கானின்  ஜவான் திரைப்படம் இன்னும் நான்கு வாரத்தில் நெட்பிக்ஸ்சில் ரிலீஸ் ஆக உள்ளது.