22 வருடங்கள் கழித்து மீண்டும் விஜயுடன் சேர்ந்த “நடிகர் ஷாம்” – வாரிசு படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரம் தெரியுமா.?

vijay
vijay

தளபதி விஜய் நடித்து வரும் அவரது 66-வது திரைப்படமான வாரிசு படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகின்ற நிலையில் தில் ராஜு தயாரிக்கிறார். படம் ஒரு ஃபேமிலி சென்டிமென்ட், ஆக்சன், காமெடி போன்ற அனைத்தும் கலந்திருக்கும் என அண்மையில் பட குழுவில் இருந்து சொல்லப்பட்டது.

இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு படத்தின் முதற்கட்ட சூட்டிங் ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டது அதனை தொடர்ந்து பல இடங்களில் எடுக்கப்பட்டு வந்த படத்தின் சூட்டிங் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கசிந்த வண்ணமே இருக்கின்றன.

தற்போது வாரிசு படத்தின் சூட்டிங் விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கூட அண்மையில் வீடியோ ஒன்றும் லீக் ஆனது, அதில் விஜய் மற்றும் ஷாம் இருவரும் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள கப்பல் தொழிலாளர்களுடன் சண்டையிடுவது போன்ற காட்சி லீக் ஆனது.

இதை எடுத்து வாரிசு படத்தில் விஜயின் சகோதரராக ஷாம் நடித்து வருகிறார் என தகவல் சொல்லப்படுகிறது. இதற்கு முன் விஜய் மற்றும் ஷாம் இருவரும் குஷி படத்தில் ஒரு சின்ன ரோலில் சந்தித்தனர் அதைத்தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் ஒரே படத்தில் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாம்மை தொடர்ந்து இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, அம்மாவாக ஜெயசுதா மற்றும் அப்பாவாக சரத்குமார் போன்றவர்கள் நடித்து வருகின்ற நிலையில் மற்றும் பல முக்கிய நடிகர் நடிகைகளும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.