மக்களை சிரிப்பால் மகிழ்வித்த நடிகர் செந்திலுக்கா இந்த நிலைமை.! பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்

senthil
senthil

ஒரு காலகட்டத்தில் காமெடி நடிகர்களான செந்தில் கவுண்டமணி இவர்கள் இல்லாத திரைப்படமே இருக்காது இவர்களின் சிறந்த நடிப்புத் திறமையினால் ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளனர்.

அதோடு மட்டுமல்லாமல் இவர்கள் காமெடி பல இதுவரையிலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அந்த வகையில் பல ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது என்று பார்த்தால் வாழைப்பழம் காமெடி தான் இன்றளவும் இந்த காமெடியை பார்த்தால் வயிறு குலுங்க குலுங்க சிரிக்கலாம்.

செந்தில் மற்றும் கவுண்டமணி இவர்களின் ஜோடி மிகவும் சிறப்பாக அமைந்தது. வடிவேலைவிடவும் இவர்கள் சிறந்து விளங்கினார்கள். இந்நிலையில் தற்பொழுது நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று  உறுதியாகி உள்ளது.செந்தில் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

அந்தவகையில் பாஜக கட்சியில் இவர் இருப்பதால் அதிமுகவிற்கு சாதகமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சென்னையை ஒட்டிய காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில கொரோனா அறிகுறிகள் இருந்ததால்  கொரோனா டெஸ்ட் எடுத்து உள்ளார்.

அதில் பாசிட்டிவ் வந்ததால் தற்பொழுது மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். எனவே விரைவில் இவர் கொரோனாவில்ருந்து குணமடைந்து நலமுடன் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.