actor seeman latests news: இன்று பிரபல கட்சியின் தலைவராக வலம் வரும் சீமான் என்பவர் இதற்கு முன்பாக திரைப்படங்களில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வந்தவர் தான். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் ராஜா வேடத்தில் புகைப்படத்தை வெளியிட்டு கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை உண்டாக்கி விட்டார்.
நடிகர் சீமான் திரை உலகில் பிரபலமாக இருந்த போது பல்வேறு கதையம்சமுள்ள திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார் அதுமட்டுமில்லாமல் இவர் நடிப்பில் வெளியான மாயாண்டி குடும்பத்தார் திரைப்படமானது இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்துவிட்டது.
இந்த திரைப்படமானது அண்ணன்-தம்பி பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதன் காரணமாக ஆண்கள் பெண்கள் என குடும்பமே கூட்டமாக சென்று இந்த திரைப்படத்தை பார்த்து ரசித்தார்கள்.
இதை தொடர்ந்து தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சீமான் நல்ல மனமும் மக்களுக்கு தொண்டு செய்யும் எண்ணமும் இருந்தும் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாமல் தோல்வி அடைந்து விட்டார்.
இன்நிலையில் சமீபத்தில் நடிகர் சீமான் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த பலரும் ஏதோ மேடை நாடகம் போல இருக்கிறது என கூறி வந்தார்கள் ஆனால் அது சீமான் மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவாகும் “கடவுள்” திரைப்படத்தின் போஸ்டர் என கூறியுள்ளார்கள்.