மீண்டும் நயன்தாராவுடன் நடிகர் சத்யராஜ்..! ராஜா ராணி படத்தையே இன்னும் மறக்க முடியல அதுக்குள்ள அடுத்த படமா..?

nayanthara-2
nayanthara-2

தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படம் ஆனது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் என்பதன் காரணமாக  பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டாலும் வசூல்லில் கெத்து காட்டியுள்ளது அந்த வகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் தன்னுடைய ஆசை காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாழ்க்கை இரண்டு காதல் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.  இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து சத்யராஜ் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது.

அந்தவகையில் சத்யராஜ் வரவேற்பு ஒட்டி ஒரு புகைப்படம் ஒன்றை பட குழுவினர்கள் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

நயன்தாரா சமீபத்தில் மாயா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கணக்கு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பேபி தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை மிக விரைவாக எடுக்கவுள்ளதாக படகுகள் அறிவித்த நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார்.

அந்த வகையில் சத்யராஜ் வரவேற்ப்பை கொண்டாடும் வகையில் படக்குழுவினர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் இன்று வைரலாக பரவி வருகிறது.

sathyaraj-1
sathyaraj-1