80, 90 கால கட்டங்களிலிருந்து இப்பொழுது வரையிலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை அள்ளி ஒரு பிசியான ஹீரோவாக ஓடிக்கொண்டிருக்கிறார் சத்யராஜ் ஆரம்பத்தில் குணச்சித்திரம், வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவ்வாறு ஒரு கட்டத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார்.
அதிலையும் வெற்றிகளை குவித்து தன்னை மிகப்பெரிய அளவில் உயர்த்திக்கொண்டு தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார். 90 கால கட்டங்களில் அதிக திரைப்படங்களில் நடித்த ஹீரோ என்ற பெருமையை இவர்தான் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஓடிக் கொண்டிருந்த சத்யராஜ் 1979 ஆம் ஆண்டு மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் சிபிராஜ், திவ்யா என ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். மகன் சிபிராஜ் அப்பாவை போல தொடர்ந்து பட வாய்ப்பு கைப்பற்றிய நடித்து வருகிறார். 80, 90 களில் ஹீரோவாக நடித்தாலும் இப்பொழுது தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்கள் தொடங்கி இளம் நடிகர்கள் படங்கள் வரை பலவற்றிலும் சித்தப்பா, அப்பா மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அதற்கு ஏற்றார் போல நடிகர் சத்யராஜ் எனது சம்பளத்தை உயர்த்தி அதிகமாகி வருகிறார் தற்பொழுது ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். ஏன் கடைசியாக நடித்த பிரின்ஸ் திரைப்படத்திற்கு கூட இந்த சம்பளம் தான் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் சம்பளத்தை பார்க்காமல் இவரை படங்களில் கமிட் செய்ய பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்களும் நிற்கின்றனர். முன்னணி நடிகர்களில் அதிக பட வாய்ப்பு வைத்திருப்பவர்களில் ஒருவராக இவர் இருக்கிறார் மேலும் டாப் ஹீரோகள் தொடங்கி இளம் நடிகர்கள் வரை இவரை படத்தில் நடிக்க வைக்கவே அதிகம் ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.