தமிழ் படம் 2 வில் விக்ரமின் இருமுகன் லவ் கதாபாத்திரத்தையும் விடாமல் கலாய்ச்சிருக்கும் நடிகர் சதீஷ் !! புகைப்படம் இதோ!!

Actor-Sathish
Actor-Sathish

Comedy Actor sathish irumugan photo: கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக விலகலை பின்பற்ற வேண்டிய நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.இந்நிலையில் நடிகர் நடிகைகள் வீட்டில் இருந்தபடியே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

sathish
sathish

நடிகர் சதீஷ் ஜித்தன் படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து இவர் மதராசபட்டினம், கொல கொலயா முந்திரிக்கா, வாகைசூடவா, மெரினா, தாண்டவம், எதிர்நீச்சல், மான்கராத்தே, கத்தி, ரெக்க, ரெமோ என பல படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் காமெடி நடிகர் சதீஷ் அவ்வப்போது தமிழ் படம் 2 வில் தான் போட்ட வேடங்களின் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

தற்போது சதீஷ் அவர்கள் விக்ரமின் இருமுகன் படத்தில் லவ் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து இருப்பார். அந்த கெட்டப்பை தமிழ் படம் 2 வுக்காக போட்டுள்ளார்.ஆனால் அந்த படத்தில் இந்தக் காட்சி இடம் பெறவில்லை. எனவே அதை தற்போது அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

sathish