Sasikumar 49 th birthday : தமிழ் சினிமா உலகில் இன்று தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் சசிகுமார். இவர் இயக்குனராக அறிமுகமாகி பின் ஹிரோவாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். முதலில் சுப்பிரமணியபுரம் என்னும் படத்தை இயக்கி, நடித்தார். படம் வெளிவந்து சக்க போடு போட்டது.
அதனைத் தொடர்ந்து இவர் நடித்த நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டி புலி, தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, கொடிவீரன், பேட்ட என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வந்த சசிகுமார் அன்மை காலமாக நடிக்கும் படங்கள் பெரிய அளவு வரவேற்பை பெறவில்லை இதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட சசிகுமார்.
சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து படம் பண்ணி வருகிறார் அந்த வகையில் அயோத்தி படத்தை தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய், நானா, நந்தன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் திரையுலகில் நடிகராக ஓடிக் கொண்டிருக்கும் இவரை ரசிகர்கள் படம் இயக்கவும் கேட்டு வருகின்றனர். அதற்கான வேலைகளையும் ஒரு பக்கம் பார்த்து வருகிறார்.
சசிகுமார் இன்று தனது 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் தமிழ் சினிமாவில் உலகில் இயக்குனராகவும், நடிகராகவும் தயாரிப்பாளராகவும்..
வினியோஸ்தராகவும் வளரும் சசிகுமார் மதுரையில் சொந்த வீடு மற்றும் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு படத்திற்கு சுமார் மூன்று கோடியில் இருந்து ஐந்து கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது மொத்தத்தில் சசிகுமாரின் சொத்து மதிப்பு சுமார் 35 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.