கொரோனா வைரசினால் உலகமே தள்ளாடிக் கொண்டு வருகிறது அந்த அளவுக்கே தனது கோர தாண்டவத்தை காட்டி வருகிறது அதிலும் குறிப்பாக இந்தியாவிலும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது கொரோனா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மருத்துவர், காவல்துறை,துப்புரவு பணியாளர்கள் போன்ற ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து தற்போது மக்களை காப்பாற்றி வருகின்றனர். இருப்பினும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் சுற்றித் திரிந்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் அன்றாட சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கொரோனவினால் தட்டுத்தடுமாறி வருகின்றனர் மக்கள் இதனால் சினிமா பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் உங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
உடங்கு உத்தரவால் அனைத்து துறைகளும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன அதிலும் குறிப்பாக விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் விவசாய மக்கள் விவசாயம் செய்ய அரசு அனுமதி அளித்தாலும் விலை பொருட்களை வாங்க ஆள் இல்லாததால் அனைத்தும் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் மதுரையை சேர்ந்த விவசாயி அறுவடை செய்ய வழியில்லாமல் தட்டுத் தடுமாறி வந்த நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
"வெளிநாட்டு வாழ்க்கை வேணாம்னு துபாய்ல இருந்து ஊருக்கு வந்து, இந்த வருஷம் 3.5 ஏக்கர் வாழை போட்டேன். தார் வெட்டுற பருவம். நல்லா விளைஞ்சு நிக்குது. ஆனா வெட்ட வழியில்லை. நட்டாத்துல நிக்கிறேன். யாராவது உதவுங்களேன்" எனக் கதறுகிறார் மதுரை, மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன் pic.twitter.com/4euU7qBcqe
— இரா.சரவணன் (@erasaravanan) April 16, 2020
இதனை பார்த்த கடை குட்டி படத்தின் இயக்குனர் சரவணன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்திலும் இதனை பகிர்ந்தார் இதனையடுத்து தமிழ் சினிமாவின் இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் அவர்கள் அந்த விவசாயி 25000 ரூபாயை வழங்கியுள்ளார்.தேசிய விவசாயி சசிகுமார் உதவிக்கு மிக்க நன்றி இதை நான் அவரிடம் கடனாகப் பெற்று கொள்கிறேன் என்றும் அதனை அடுத்த அறுவடை முடிந்ததும் பணத்தை அவரிடம் திரும்பி வந்துவிடும் எனவும் கூறியுள்ளார்.
வாழை அறுவடைக்கு வழியின்றி சிரமப்பட்ட இந்த விவசாயிக்கு 25,000 பண உதவி செய்திருக்கிறார் நடிகர் சசிகுமார். “சசி சார் உதவியா கொடுத்தாலும் அதை கடனா நினைச்சு, அடுத்த சாகுபடியில் நிச்சயம் அவருக்குத் திருப்பிக் கொடுப்பேன்” என்கிறார் விவசாயி கோபாலகிருஷ்ணன். நல்ல மனம் வாழ்க @SasikumarDir https://t.co/EqaezfCfPg
— இரா.சரவணன் (@erasaravanan) May 8, 2020