Actor Sasikumar lockdown volunteer video: சசிகுமார் தமிழ் திரைப்பட இயக்குனர் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் இயக்குனர் அமீருக்கு உதவி இயக்குனராக மௌனம் பேசியதே, ராம், போன்ற படங்களில் பணியாற்றினார். மேலும் இயக்குனர் பாலா உடன் இணைந்து சேது படத்திற்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மேலும் இவர் சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இதனைத்தொடர்ந்து நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், பிரம்மன் போன்ற சிறந்த கதைகளை உடைய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் மூலம் தன் ரசிகர்களை கவர்ந்தா.ர் மேலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே தமிழ் திரையுலகில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவர் சுப்பிரமணியபுரம் மற்றும் பசங்க போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
இவர் தற்பொழுது கொரோனா வைரஸின் ஊரடங்கு உத்தரவின் காரணமாக மதுரையில் உள்ளார். அங்கு தாமாகவே முன்வந்து காவல் துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் காவல் காவல்துறையினரின் தியாகத்தை பற்றி கூறியுள்ளார். தற்போதும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
இதோ அந்த வீடியோ.