தெலுங்கு திரைவுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சர்வானந்த் நேற்று இரவு கார் விபத்தில் சிக்கி இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் சர்வானந்த் விபத்தில் சிக்கிவுள்ளார்.
இந்த விபத்தில் சர்வானத்திற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இன்று காலை நடிகர் சர்வானந்த் ஐத்ராபாத்தில் உள்ள பிலிம் நகர் சந்திப்பில் ரேஞ்ச் ரோவர் காரில் சென்று கொண்டிருந்த பொழுது விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் விபத்தில் சிக்கிய நிலையில் இதனை அடுத்து அங்கிருந்து அவர்கள் உடனடியாக சர்வானந்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பிறகு சர்வானந்துக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டு இருக்கும் நிலையில் இந்த சம்பவம் குறித்து இதுவரையிலும் அவருடைய குடும்பத்தினர்கள் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க முயன்றதால் சர்வானந்தின் கார் டிவைடரில் மோதி இருப்பது தெரிகிறது.
இவ்வாறு அவர் பயணித்த கார் விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் கார் என்பதனால் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. எனவே இதன் காரணத்தினால் அவருக்கு எந்த ஒரு படுகாயமும் இல்லாமல் உயிர் தப்பித்துள்ளார். இந்நிலையில் சர்வானந்திற்கு ரக்ஷிதா ரெட்டி என்பவர் உடன் வருகின்ற ஜூன் 2 மற்றும் 2ம் தேதிகளில் திருமணம் நடைபெற உள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் சர்வானந்தின் திருமண விழா கொலகாலமாக நடப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இவ்வாறு விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சர்வானந்துக்கும், ரக்ஷிதா ரெட்டிக்கும் கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் தற்பொழுது திருமணம் நடைபெற இருக்கிறது.