தமிழ் சினிமாவில் 80ஸ் காலம் முதல் 90ஸ் காலம் வரை முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சரத்குமார் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப் படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். வேறு எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் மிக சிறப்பாக செய்து கொடுக்கும் நமது நடிகர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
இவ்வாறு தமிழ் சினிமாவில் பெயர் போன நமது நடிகர் சரத்குமார் சமீபத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை சுகாசினி அவர்கள் நடிக்க உள்ளார். இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்திற்கு சமரன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திரைப்படத்தை இயக்குனர் திருமலை பாலுச்சாமி அவர்கள் இயக்க உள்ளதாகவும் இத் திரைப்படமானது தமிழகத்தில் உள்ள தண்ணீர் தட்டுப்பாடு அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் ஏவிஎம் கார்டனில் பூஜையுடன் நடைபெற்றுள்ளது இந்த பூஜையில் நடிகர் சரத்குமார் சுகாசினி இயக்குனர் திருமலை ஆகியோர்கள் கலந்துள்ளது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தை பற்றி நமது இயக்குனர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நமது இயக்குனர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஒரு தண்ணீர் இன்றி வறண்ட பகுதியில் இவர் வளர்ந்து உள்ளதாகவும் தற்போது இதுவரை யாரும் பார்த்திராத விஷயங்களை நானே திரைப்படத்தின் மூலம் காட்டப் போகிறேன் என்றும் கூறியுள்ளார்.
நடிகர் சரத்குமார் இந்த திரைப்படத்தில் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வரும் நாயகனாக நடிக்க உள்ளார் மேலும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் கஞ்சாகருப்பு நடிக்கவுள்ளார். இவ்வாறு உருவாகும் திரைப்படமானது அந்த காலத்தில் இருந்து இந்த காலத்திற்கு கொண்டு செல்வது போல் இருக்கும்.