‘பத்து தல’ நடிகரின் புதிய திரைப்படத்தில் இணைந்த நடிகர் சரத்குமார்.! வெளியான டைட்டில் போஸ்டர்..

sarathkumar

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கௌதம் கார்த்திக். இவர் சிம்புவுடன் இணைந்து பத்து தல திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் இதனை அடுத்து இவருடைய புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு கௌதம் கார்த்திக் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமானார். இவருடைய நடிப்பில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது. இவ்வாறு ஹீரோவாக மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் சிம்புவுடன் இணைந்த பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் வருகின்ற மார்ச் மாதம் வெளியாக இருப்பதாக பல குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் சற்று முன் கௌதம் கார்த்திக் நடிக்க இருக்கும் போது புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது அந்த படத்திற்கு கிரிமினல் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

criminal
criminal

மேலும் கௌதம் கார்த்திக் கூட இணைந்து சரத்குமார் முக்கிய கரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட இந்த படத்தினை தட்சிணாமூர்த்தி ராமர் என்பவர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களைத் தொடர்ந்து செல்வக்குமார் ஒளிப்பதிவில் உருவாக இருக்கும் இந்த படத்தினை பாரா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

koedham karthik

மேலும் இந்த படத்திற்கான முதல் போஸ்டர் வெளியாகி உள்ளது இவர்களைத் தொடர்ந்து இந்த படத்தில் மற்றும் நட்சத்திரங்கள் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளதாகவும் விரைவில் இது குறித்து அடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் பட குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.