தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் என அனைத்து அவதாரங்களையும் எடுத்தவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடித்த அனைத்து படங்களுமே மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து சரத்குமாரை முன்னணி நடிகராக ஆக்கியது.
இவர் கேஎஸ் ரவிக்குமார் உடன் இணைந்து 12க்கும் மேற்பட்ட மெகாஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா மட்டுமல்லாது அரசியலிலும் கால் தடத்தை பதித்து தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இவர் ஹீரோவாக 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவரே இயக்கி நடித்த தலைமகன் திரைப்படம் இவருக்கு தோல்வியை கொடுத்தது. இந்த திரைப்படம் ஒரு நாள் கூட ஓடவில்லை இதனாலேயே இவர் திரைப்படங்களை இயக்குவதை கைவிட்டார்.
அதனைத்தொடர்ந்து இவர் பேட்டி ஒன்றில் திரைப்படத்தை இயக்குவதில் விருப்பம் இருந்ததாகவும் தலைமகன் திரைப்படத்திற்கு பிறகு கொஞ்ச நஞ்ச ஆசையும் போய் விட்டது எனவும் வெளிப்படையாக கூறி இருந்தார்.