சிகிச்சை பலனின்றி காலமானார் நடிகர் சரத்பாபு.!

sarath-babu
sarath-babu

கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நிலை குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரபல நடிகர் சரத்பாபு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இப்படிப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று நடிகர் சரத் பாபு மறைந்திருக்கும் நிலையில் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் சரத்பாபுவிற்கு தற்பொழுது 71 வயது. இவர் 1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் மூலம் நடிகராக சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார் சரத் பாபு.

அப்படி 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த இவர் நடிகர் கமல் மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவ்வாறு தனது சினிமா கேரியரில் ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து தற்போது வரையிலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவ்வாறு 71 வயதாகும் சரத் பாபுவிற்கு சில வருடங்களாகவே உடல்நிலை குறைவு இருந்து வந்துள்ளது ஆனால் அதனை மருத்துவரின் உதவி மூலம் சிகிச்சை பெற்று வந்தார்.

நலமுடன் இருந்து வந்த சரத்பாபுவிற்கு திடீரென உடல்நிலை சரியில்லை எனவும் இதனால் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாகவும் தகவல் வெளியானது எனவே இவருக்கு விரைவில் உடல் நலம் சரியாகிவிடும் என ரசிகர்கள் திரைப் பிரபலங்கள் பலரும் எதிர்பார்த்து வந்தனர்.

எனவே ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சரத் பாபு இன்று உயிரிழந்துள்ளார். இவ்வாறு நடிகர் சரத்பாபு மறைவிற்கு திரைவுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.