சினிமா உலகில் இருக்கும் பிரபலங்கள் பலரும் தனது திறமையை வளர்த்துக்கொண்டு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்கின்றனர் அந்த வகையில் நடிகர் சந்தானம் சினிமா உலகில் காமெடியனாக அறிமுகமாகி இருந்தாலும் தற்போது ஹீரோவாக வெற்றி கண்டு வருகிறார். முதலில் வெள்ளி திரையில் காமெடியனாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் குடியேறினார்.
ஒரு கட்டத்தில் டாப் நடிகரான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார் அதன் பிறகு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் ஏராளமாக குவிந்ததால் வேறு வழி இன்றி ஹீரோவாக நடிக்க தொடங்கினார் முதலில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதன் பின் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாக மாறியதால் தற்போது ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து கொண்டுதான் இருக்கிறது. இப்பொழுது கூட ரத்தினகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை கொண்டு வரும் திரைப்படம் குலு குலு.
இந்தப் படத்தில் சந்தானத்துடன் கைகோர்த்து அதுல்யா சந்திரா, பிரதீப் ராவத், சார்ஜ் மரியன், சாய் தீனா, மாறன், கவி, யுவராஜ் மற்றும் பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். குலு குலு படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது முதல் நாளே கோடிக்கணக்கில் வசூல் செய்த குலு குலு திரைப்படம்.
இரண்டு நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்து உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் இரண்டு நாள் முடிவில் குலு குலு திரைப்படம் சுமார் மூன்று கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. வருகின்ற நாட்களில் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் நிச்சயம் இன்னும் சில கோடிகளை அள்ளி அசத்தும் என தெரிய வருகிறது.