டாக்டர் ராமதாசுடன் நடிகர் சந்தானம்..! இணையத்தில் வெளியான புகைப்படத்தை பங்கம் செய்த நெட்டிசன்கள்..!

santhanam-01
santhanam-01

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர்களில் நடிகர் சந்தானமும் ஒருவர் அந்த வகையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.

இவ்வாறு தனது காமெடியால் சின்னத்திரை ரசிகர்களை சிரிக்க வைத்த சந்தானம் அதன்பிறகு வெள்ளித்திரையிலும் நகைச்சுவை நடிகராக களம் இறங்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் இவருடைய நக்கலான பேச்சுக்கும் டைமிங் பஞ்ச்க்கும் சிரிக்காத ரசிகர்களே கிடையாது.

இவ்வாறு காமெடி நடிகனாக திரை உலகில் கால்தடம் பதித்த நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாகவும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் இவர் ஹீரோவாக நடித்த பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சமீபத்தில் வெளியான டிக்கிலோனா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் சந்தானம் டாக்டர் ராமதாஸ் அய்யாவை நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படம் ஆனது டாக்டர் அன்புமணி ராமதாஸ் மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.

இந்நிலையில் இப்புகைப்படத்தை நீண்ட நாட்கள் கழித்து அய்யாவை சந்திக்கிறேன் என ஒரு பதிவினை வெளியிட்டு புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார் இவ்வாறு வெளிவந்த புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமல்லாமல் நெட்டிசன்கள் பலரும் சந்தானத்தை கலாய்த்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தின் மூலமாக பல்வேறு மீம்ஸ் கிரியேட் செய்து சந்தானத்தை வெறுப்பேற்றி வருகிறார்கள்.