தலைவனுக்கு எவ்வளவு தில்லு பாரு.. புலி வாலை பிடித்த நடிகர் சந்தானம்..! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.

santhanam-
santhanam-

கடந்த சில வருடங்களாக பல இசையமைப்பாளர்கள் காமெடியன்கள் என பலரும் ஹீரோ அவதாரம் எடுத்து அசத்துகின்றனர் அந்த வகையில் நடிகர் சந்தானம் தற்பொழுது சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக ஓடிக்கொண்டு இருக்கிறார். முதலில் காமெடியனாக சின்ன திரையில் ஜொலித்த சந்தானம் ஒரு கட்டத்தில் வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதை சரியாக பயன்படுத்தி கொண்டு தனக்கான ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார் மேலும் திரை உலகில் உச்ச நட்சத்திர நடிகர் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார் இப்படி ஓடிய இவர் திடீரென வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்..

படத்தில் ஹீரோவாக நடித்து என்ட்ரி கொடுத்தார் முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் ஹீரோவாக நடிக்க கிடைத்தது.  அந்த வகையில் தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, டக்கால்டி, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத் போன்ற பல படங்களில் நடித்து வெற்றி கண்டார் தற்பொழுது கூட கிக், சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இப்படி ஓடிக் கொண்டிருக்கும் சந்தானம் அண்மையில் போயஸ் கார்டன் ஏரியாவில் பல கோடி கொடுத்து ஒரு வீட்டையும் வாங்கி இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த நிலையில் சந்தானம் பற்றிய இன்னொரு தகவல் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சந்தானம் மிருக காட்சியில் புலியின் வாலை பிடித்துள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் தலைவனுக்கு செம்ம தில்லு தான் எனக்கூறி கமாண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த அழகிய புகைப்படம் மற்றும் வீடியோவை நீங்களே பாருங்கள்..

santhanam-
santhanam-