முன்னணி நடிகர்களை சைடு போடும் அளவிற்கு கோட் சூட் என ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகர் சந்தானம்..! வைரலாகும் புகைப்படம் இதோ..!

santhanam
santhanam

actor santhanam latest movie first look photos: திரை உலகில் காமெடியனாக பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் சந்தானம் இவர் தொலைக்காட்சியில் தன்னுடைய சிறந்த திறனை வெளிக்காட்டி அதன் மூலமாக படிப்படியாக சினிமாவிற்குள் நுழைந்தவர்.

இவ்வாறு இவர் காமெடியனாக நடித்து பல திரைப்படங்களை ஹிட் கொடுத்துள்ளார். தற்சமயம் எவ்வளவு நாள் தான் நாமும் காமெடியனாகவே இருப்பது என்ற வகையில் தற்போது ஹீரோவாக சினிமாவில் களம் இறங்கி உள்ளார் நடிகர் சந்தானம்.

இதை தொடர்ந்து சமீபத்தில் பல திரைப்படங்களில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். அந்த வகையில் இவர் கதாநாயகனாக நடித்தாலும் அனைவரும் இவரை காமெடி ஆக்டர் என்ற அர்த்தத்திலேயே பார்த்து வந்தனர்.

இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் இவர் நடித்த தில்லுக்கு துட்டு என்ற திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் ரசிகர்கள் அவரை கதாநாயகனாக பார்க்கவும் இத்திரைப்படம் உதவியாக இருந்தது.

இந்நிலையில் சந்தானம் தற்சமயம் நடித்து வெளிவந்த பிஸ்கோத் திரைப்படமானது சொல்லும்படி அவருக்கு கைகொடுக்கவில்லை இந்நிலையில் அடுத்த படியாக அவர் நடிக்கும் திரைப்படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.

நடிகர் சந்தானம் சமீபத்தில் நடித்து கொண்டு இருக்கும் திரைப்படம் தான் பாரிஸ் ஜெயராஜ் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது செகண்ட் லுக் வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படத்தில் நடிகர் சந்தானம் கோட் சூட் என ஆளே அடையாளம் தெரியாதபடி மாறி உள்ளாராம்.

santhanam
santhanam